மனம் மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்தல் - வீடியோவில் கதறி அழும் பெண் ஆசிரியர்

சென்னையில், மருத்துவக் கல்லூரியில் உடன் பணிபுரியும் சக ஊழியர்கள், தன்னை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துவதாக பெண் உதவி பேராசிரியர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
பெண் உதவி பேராசிரியர் வெளியிட்ட அந்த வீடியோவில் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பொது மேலாளர் சசிகுமார், துணை முதல்வர் வெங்கடகிருஷ்ணன், அலுவலக உதவியாளர் லட்சுமிகாந்தன் உள்பட சிலர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் தன்னை அடைத்து வைத்து உணவு, குடிநீர் வழங்காமல் கொடுமைப்படுத்துவதாக வீடியோவில் கண்ணீர் மல்க புகார் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்