"ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடம் எடுக்க அனுமதியில்லை" - அமைச்சர் செங்கோட்டையன்

"மாலை நேரத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்"
x
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் 5 வது நீரேற்று நிலைய கட்டிப்பணிகள் தொடக்கவிழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று, பூமி பூஜையுடன் அடிக்கல் நாட்டும் பணியை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தாமாக முன் வந்து மாலை நேரத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம் என்றும், வகுப்பறையில் பாடம் எடுக்க அனுமதியில்லை என்றார். 

Next Story

மேலும் செய்திகள்