தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் : "428 நபர்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" - ஒரு நபர் ஆணையம் பரிந்துரை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 428 நபர்களின் மீதுள்ள வழக்கை நல்லெண்ண அடிப்படையில் திரும்பப் பெறவேண்டும் என ஒரு நபர் ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
x
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 428 நபர்களின் மீதுள்ள வழக்கை நல்லெண்ண அடிப்படையில் திரும்பப் பெறவேண்டும் என ஒரு நபர் ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில், கைது செய்யப்பட்ட நபர்கள் வெளிநாடு செல்ல தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும், போலீசாரால் தாக்கப்பட்டு காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு, தலா ஒன்றரை லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்