தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை - கடும் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்

பெட்ரோல், டீசல் விலை கடந்த நான்கு நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை - கடும் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்
x
சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் தாக்கம் எற்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா, அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் நிலையில், அதன் தாக்கம் எதிரொலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது.  இந்த நிலையில் இந்தியா முழுவதும்  பெட்ரோல், டீசல் விலை கடந்த நான்கு நாட்களில் ஒரு ரூபாய் வரை அதிகரித்துள்ளாது. சென்னையில், கடந்த 16 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 74 ரூபாய் 85 காசுகளாக இருந்த நிலையில், தற்போது 75 ரூபாய் 93 காசுகளாக உயர்ந்துள்ளது. டீசல் விலை 69 ரூபாய் 15 காசுகளாக இருந்த நிலையில், இன்று 70 ரூபாய் 07 காசுகளாக அதிகரித்துள்ளது.  கடந்த 4 நாட்களில் 1 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்