ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் வேலையின்றி தவிப்பு : தூத்துக்குடி ஆட்சியரிடம் தொழிலாளர்கள் மனு

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த போராட்டத்தின்போது, நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் வேலையின்றி தவிப்பு : தூத்துக்குடி ஆட்சியரிடம் தொழிலாளர்கள் மனு
x
தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த போராட்டத்தின்போது, நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனால், ஆலையில் வேலை பார்த்த பல ஆயிரக்கணக்கானோர் வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆலையில் பணியாற்றி வந்த மீளவிட்டான் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்து இருப்பதாகவும், ஆலையை மீண்டும் திறக்க  அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்