திருமங்கலம் : குடிநீருக்காக 3 கி.மீ. தூரம் நடக்க வேண்டிய ​நிலை

குடிநீர் மற்றும் அன்றாட பணிகளுக்காக 3 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் கிராம மக்கள் காவி​ரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமங்கலம் : குடிநீருக்காக 3 கி.மீ. தூரம் நடக்க வேண்டிய ​நிலை
x
திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்கப்படை கிராமத்தில் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்குள்ள கண்மாயில் ஆழ்துளை கிணறு அமைத்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் 15 நாட்களுக்கு ஒருமுறை உப்புத் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆழ்துளை கிணற்றில் நீர்மட்டம் குறைந்ததால் தண்ணீர் விநியோகம் தடைபடுவதாக கிராம  மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால், மூன்று கிலோ மீட்டர்  தொலைவுக்கு நடந்து சென்று கூட்டு குடிநீர் குழாயில் இருந்து ஒழுகும் நீரை வடிக்கட்டி பிடித்து குடித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தங்கள் கிராமத்திற்கும் காவிரி கூட்டு குடிநீர் மூலம் குடிநீர் அர நடவடிக்கை எடுக்க வேண்டும் எ ன அதிகாரிகளுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்