"ஹஜ் மானியம் குறைப்பு வேதனையளிக்கிறது" - அப்துல் ஜபார், ஹஜ் கமிட்டி தலைவர்

ஹஜ் புனித யாத்திரைக்கான மானியம் மூவாயிரம் ரூபாய் குறைந்துள்ளது வேதனை அளிப்பதாக ஹஜ் கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார்.
x
கடந்த ஆகஸ்ட் மாதம் ஹஜ் புனித பயணம் சென்ற பயணிகள், நேற்று நள்ளிரவில் சென்னை திரும்பினர். அவர்கள், தமிழக அரசு மற்றும் ஹஜ் கமிட்டி சார்பில் வரவேற்கப்பட்டனர். அவர்களை வரவேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஹஜ் கமிட்டித் தலைவர், மதினாவுக்கு பயணம் சென்றவர்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும் இது குறித்து சவுதி அரசிடம் தெரிவிப்போம் என்றும் கூறினார். ஹஜ் மானியம் பதினாறாயிரம் ரூபாயில் இருந்து, பதிமூன்றாயிரம் ரூபாயாக குறைந்தது வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார். ஹஜ் சென்ற நான்காயிரத்து 627 பேரில், 5 பேர் உடல்நலக் குறைவால் இறந்து விட்டதாகவும் மீதமுள்ளவர்கள் திரும்பி வந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்