போக்குவரத்து விதிமுறை மீறல் - நவீன கேமராக்கள் மூலம் 28 லட்சம் வழக்கு பதிவு

சென்னையில் இரண்டு மாதங்களில் மட்டும் அதிநவீன கேமராக்கள் மூலம், சுமார் 28 லட்சம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
x
* சென்னை அண்ணா நகரில் கடந்த ஜூலை மாத இறுதியில் 5 முக்கிய சந்திப்புகளில் A.N.P.R. எனப்படும் 58 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டன.

* இந்த கேமராக்கள் 24 மணிநேரமும் தானியங்கி முறையில் இயங்கி, போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை  படம்பிடித்து வருகின்றன.

* இந்த கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக ஒரே நாளில் சென்னை அண்ணா நகரில் 63 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

* போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை படம்பிடிக்கும் இந்த தானியங்கி கேமராக்கள் மூலம் ஒட்டுமொத்தமாக சுமார் 28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

* போக்குவரத்து விதிகளை மீறியதாக, அதிநவீன A.N.P.R. கேமராக்கள் மூலம் தற்போது வரை  சுமார் 8300 வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்