10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிதம்பரம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
x
டெங்கு காய்ச்சல்  பாதிப்பு காரணமாக சிதம்பரம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதா கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து விசாரித்தார். பின்னர் டெங்கு பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்க சுகாதாரப்பணியாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார்

Next Story

மேலும் செய்திகள்