"பத்திரப்பதிவு கட்டணம் : குறைக்க நடவடிக்கை" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

பத்திர பதிவு கட்டணத்தை குறைப்பது குறித்து முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்
x
பத்திர பதிவு கட்டணத்தை குறைப்பது குறித்து முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நடைபெற்ற தனியார் விழாவில் பங்கேற்று பேசிய அவர், பத்திர பதிவு விலையை குறைக்க அரசும் பரீசிலித்து வருவதாக தெரிவித்தார். மேலும், ரியல் எஸ்டேட் கட்டுமான துறையில் ஒற்றை சாளர முறையில் வீடு கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், உள்ளாட்சி அமைப்புகளில் இதுவரை வீட்டு வசதி வாரியம் மூலமாக 13 லட்சம் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கபட்டு, 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்