நாங்குநேரி - விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்போது..? நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்த பரிசீலனை

தமிழகத்தில் காலியாக இருக்கும் நாங்குநேரி - விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு எப்போது தேர்தல் நடைபெறும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாங்குநேரி - விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்போது..? நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்த பரிசீலனை
x
தமிழகத்தில் காலியாக இருக்கும் நாங்குநேரி - விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு எப்போது தேர்தல் நடைபெறும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாங்குநேரி எம்எல்ஏ-வாக இருந்த வசந்தகுமார், மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதாலும், விக்ரவாண்டி எம்எல்ஏ வாக இருந்த ராதாமணி மரணம் அடைந்ததாலும், இவ் விரு தொகுதிகளும் காலியாக உள்ளன. எனவே, 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பதால், நாங்குநேரி, விக்ரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த, தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது. இந்தாண்டு இறுதியில் மஹாராஷ்டிரா, அரியானா மற்றும் ஜார்கண்ட் ஆகிய 3 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆகவே, இந்த தேர்தலுடன்,  நவம்பர் மாதம், நாங்குநேரி, விக்ரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்