சிவகங்கை அருகே உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளை - கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி
சிவகங்கை அருகே இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சிவகங்கை அருகே இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். சிங்கம்புணரியை அடுத்த கட்டுகுடிபட்டி செல்வ விநாயகர் கோவில் காளை வயது முதிர்வு காரணமான உயிரிழந்தது. இதனையடுத்து மந்தை திடலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த செல்வா என செல்லமாக அழைக்கப்பட்ட காளைக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மேளதாளம், வாணவேடிக்கை, ஒப்பாரியுடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காளை நல்லடக்கம் செய்யப்பட்டது.
Next Story