தமிழகம் முழுவதும் நாளை குரூப் 4 தேர்வு - தேர்வர்கள் செய்ய வேண்டியது - செய்யக் கூடாதது என்ன?

தமிழகம் முழுவதும் நாளை குரூப் 4 போட்டி தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேர்வர்கள் செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது என்னென்ன என்று பார்ப்போம்.
தமிழகம் முழுவதும் நாளை குரூப் 4 தேர்வு - தேர்வர்கள் செய்ய வேண்டியது - செய்யக் கூடாதது என்ன?
x
மொத்தம் 6 ஆயிரத்து 491 காலியிடங்களுக்கு நடைபெறும் குரூப்-4 போட்டித் தேர்வை 16 லட்சத்து 30 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

காலை 10 மணி முதல் ஒரு மணி வரை மூன்று மணி நேரம் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வர்கள், அரை மணி நேரத்திற்கு முன்னதாக வந்துவிடவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட் தவிர வேறு எதுவும் தேர்வு அறைக்குள் கொண்டு வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலம் மற்றும் கருப்பு நிற பால் பாயிண்ட் பென் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு அறைக்குள் எலக்ட்ரானிக் சாதனங்கள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேள்வித்தாளில் தேர்வர்கள் எதையும் எழுத கூடாது என்றும் இங்க் பேனாவால் விடைகளை, "ஷேடிங்" செய்வதோ, பென்சில் உபயோகப்படுத்தவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைகேடான செயல்களில்  ஈடுபடுவது, ஒருவரை ஒருவர் பார்த்து எழுதுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்