சென்னை : மதுபோதையில் சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய 5 பேர்

சென்னை மயிலாப்பூரில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருப்பவர் கார்த்திகேயன். இவர் லஸ் கார்னர் அருகே ஆர்.கே மடம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அவ்வழியே வந்த 5 பேர், கார்த்திகேயன் வண்டியில் மோதி உள்ளனர்.
சென்னை : மதுபோதையில் சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய 5 பேர்
x
சென்னை மயிலாப்பூரில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருப்பவர் கார்த்திகேயன். இவர் லஸ் கார்னர் அருகே ஆர்.கே மடம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அவ்வழியே வந்த 5 பேர், கார்த்திகேயன் வண்டியில் மோதி உள்ளனர். மேலும் மதுபோதையில் இருந்த அவர்கள், கார்த்திகேயனை தாக்கியதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வினோத், ராஜேஷ், நவீன் ஆகிய 3 பேரை மடக்கி பிடித்தனர். தப்பி ஓடிய கீர்த்தி வாசன் மற்றும் பப்லு ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்