கோவை : குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு - மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் முற்றுகை

சொத்து வரி உயர்வு, 24 மணி நேர குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் கொடுத்ததை கண்டித்து கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக முற்றுகையிட்டு அனைத்துக்கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
கோவை : குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு - மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் முற்றுகை
x
சொத்து வரி உயர்வு, 24 மணி நேர குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் கொடுத்ததை கண்டித்து கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக முற்றுகையிட்டு அனைத்துக்கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் திமுக, சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பங்கேற்றன. இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்ற பொள்ளாச்சி திமுக எம்.பி. சண்முகசுந்தரம், கோவை சிபிஎம் எம்.பி. பி.ஆர்.நடராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 
தொடர்ந்து, தடையை மீறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்