"எந்த மொழி படித்தாலும் தாய் மொழிக்கு முன்னுரிமை" - வெங்கய்யா நாயுடு பேச்சு

எந்த மொழி படித்தாலும் தாய் மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
x
தர்மமூர்த்தி ராவ் பகதூர் அறக்கட்டளையின் நிறுவனர் 150வது பிறந்தநாள் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பேசிய குடியரசு துணை தலைவர், ஆங்கிலம், தெலுங்கு, பிரெஞ்ச் உள்ளிட்ட எந்த மொழி படித்தாலும் தாய் மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். புதிய கல்விக்கொள்கை தேவையான ஒன்று என்றும் அவர் கூறினார். நோயற்ற வாழ்வே குறையற்ற செல்லவம் என்று தெரிவித்த வெங்கய்யா நாயுடு, துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்தியா எந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்