ஓசூர் : பொது மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகள் வனத்துறையிடம் சிக்குமா?

ஓசூர் அருகே சுற்றித் திரியும் 2 காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் தயாராகி வருகின்றனர்.
x
ஓசூர் அருகே தென்பெண்ணை கரையோர கிராம மக்களை அச்சுறுத்தி வந்த 2காட்டு யானைகள், தற்போது பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த காட்டு யானைகளை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, பேரண்டப்பள்ளி வனப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மாவட்டம் முழுவதில் இருந்து 60-க்கும் மேற்பட்ட வனத் துறை ஊழியர்கள் வந்துள்ளனர். கும்கி யானைகள் உதவியுடன் அந்த 2 யானைகளை பிடிப்பதுடன், 'குரோபார்' என்ற காட்டு யானையின் கழுத்தில்  ரேடியோ காலர் பொருத்தவும் வனத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்திலிருந்து சுகுமார் என்பவர் வந்துள்ளார். இன்றுக்குள் அந்த யானைகளை வனத்துறையினர் பிடித்து அடர்நத வனப்பகுதியில் ​விடுவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்