டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 போட்டித் தேர்வு - 6491 காலி இடங்களுக்கு செப்., 1 ஆம்தேதி தேர்வு
வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் குரூப்-4 தேர்வை 16.30 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுத உள்ளதாக தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் குரூப்-4 நிலையில் காலியாக உள்ள ஆறாயிரத்து, 491 இடங்களை நிரப்ப , வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி போட்டி தேர்வு நடைபெறுகிறது.இந்த தேர்வை எழுதுவதற்கு 16.30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், அனைவரும், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது . ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் , உரிய ஆதாரங்களுடன் வரும் 28ம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார்.
Next Story

