"மலை மாடுகளை மேய்ச்சலுக்கு விட அனுமதி சீட்டு வேண்டும்" - விவசாயிகள் சாலை மறியல்

மலை மாடுகளை, வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு விட, இலவச அனுமதி சீட்டு வழங்கிட கோரி திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மலை மாடுகளை மேய்ச்சலுக்கு விட அனுமதி சீட்டு வேண்டும் - விவசாயிகள் சாலை மறியல்
x
மலை மாடுகளை, வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு விட, இலவச அனுமதி சீட்டு வழங்கிட கோரி திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள், சாலை மறியலில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்கு, பகுதிகளில், ஆயிரக்கணக்கான மலை மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இவ்வகை மாடுகளை, மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்குள் அனுமதிக்க முடியாது என, வனத்துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, சாலை மறியலில், விவசாயிகள் ஈடுபட்டது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்