"விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்" - அமைச்சர் காமராஜ்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் கடந்த 13-ம் தேதி சம்பா சாகுபடிக்காகவும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
x
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் கடந்த 13-ம் தேதி சம்பா சாகுபடிக்காகவும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கரூர், திருச்சி வழியாக கல்லணையை வந்தடைந்தது. இதனையடுத்து இன்று காலை, கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம்  ஆகிய ஆறுகளில் சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.  விழாவில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, விஜயபாஸ்கர், காமராஜ், வெல்லமண்டி நடராஜன், ஓ.எஸ்.மணியன் மற்றும் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்றனர். மேலும் விவசாய பிரதிநிதிகளும், நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கூடி நின்று காவிரியை வரவேற்றனர்.



Next Story

மேலும் செய்திகள்