சி.சி.டி.வி. கேமராவால் குற்றங்கள் பாதியாக குறைவு : சென்னை மாநகர காவல்துறை புள்ளி விவரங்களுடன் வெளியீடு

சென்னையில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டதை அடுத்து குற்றங்கள் 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
சி.சி.டி.வி. கேமராவால் குற்றங்கள் பாதியாக குறைவு : சென்னை மாநகர காவல்துறை புள்ளி விவரங்களுடன் வெளியீடு
x
சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதனையடுத்து சிசிடிவி வைக்கப்படுவதற்கு முன்னாள் நடந்த குற்றங்களின் எண்ணிக்கையும்,  நகரில் சிசிடிவி வைக்கப்பட்ட பின்பு நடந்த குற்றங்களின் எண்ணிக்கையும் சுமார் பாதியாக குறைந்து இருக்கிறது என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.  2018ஆம் ஆண்டு முதல் 6 மாதத்தில் 258 ஆக இருந்த செயின் பறிப்பு சம்பவம், நடப்பாண்டில் 137ஆக குறைந்துள்ளது. இதே போன்று பொது இடங்களில் நடக்கும் தகராறு, சி.சி.டி.வி. வைத்த பிறகு 24 ஆயிரத்து 447 இலிருந்து, 14 ஆயிரத்து 457 ஆக குறைந்துள்ளது. இதே போன்று கொடுங்காய வழக்கு, 438இலிருந்து, 360ஆக குறைந்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது. மேலும் திருட்டு சம்பவங்கள், 438 இலிருந்து 360ஆக குறைந்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை குறிப்பிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்