நீலகிரி மாவட்டத்திற்கு நிவாரண நிதியாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி தேவை - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

கனமழை - வெள்ளத்தால் புரட்டி போட்ட நீலகிரி மாவட்டத்திற்கு நிவாரண நிதியாக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக அரசுக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்திற்கு நிவாரண நிதியாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி தேவை - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்
x
கனமழை - வெள்ளத்தால் புரட்டி போட்ட நீலகிரி மாவட்டத்திற்கு நிவாரண நிதியாக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யுமாறு, தமிழக அரசுக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நீலகிரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து, மத்திய அரசின் பேரிடர் நிதியை பெற்று, போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கி விடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.  மழை - வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு வழங்கும் தலா 10 லட்சம் ரூபாய் போதாது என குறிப்பிட்டு உள்ள மு.க ஸ்டாலின், உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். எதிர்காலத்தில், இதுபோன்ற பாதிப்புகள், உருவாகாமல் தடுக்க, வல்லுநர் குழு அமைத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்