தேசிய கொடியை ஏற்றி வைத்தார், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சுதந்திரதின விழாவையொட்டி, சென்னை- கோட்டை கொத்தளத்தில் மூவர்ண தேசியகொடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றி வைத்தார்.
தேசிய கொடியை ஏற்றி வைத்தார், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
x

சென்னை கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்றது. பின்னர் திறந்த ஜீப்பில் சென்ற முதலமைச்சர், முப்படை மற்றும் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து சுதந்திர தின உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேலூர் மாவட்டத்தில் இருந்து புதிதாக திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 2 மாவட்டம் பிரிக்கப்பட உள்ளது என்றார். 

பின்னர் அங்கு நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு முதலமைச்சர் நல்ஆளுமை விருதுகளை வழங்கினார். சென்னையில் குற்றங்களை கண்டுபிடிக்க சிசிடிவி கேமரா பொருத்தியது மற்றும் பேஸ் டிடெக்டர் செயலியை வெளியிட்டதற்காக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கும், வேலூர் மாவட்டம் நாகநதி சீரமைப்பு திட்ட பணிகளுக்காக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கும், ஜி.எஸ்.டி குறித்த சந்தேகங்களுக்கு 24 மணிநேர ஆலோசனை வழங்கும் சேவைக்காக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இதேபோல், பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தவர்களுக்கு முதலமைச்சர் விருதுகளை வழங்கினார்.  வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, தமிழக மீன்வளத்துறை துணை இயக்குனர் ரம்யா லட்சுமிக்கு வழங்கப்பட்டது. நெல்லையில் கொள்ளையர்களை துணிவுடன் விரட்டியடித்த சண்முகவேல் - செந்தாமரை தம்பதியினருக்கு, அதீத துணிவிற்கான சிறப்பு விருதை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்