கொள்ளிடம் தடுப்பணை மிக உறுதியானது - பொதுப் பணித் துறை அதிகாரி ஜெயராமன்

கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை உடைவதற்கு வாய்ப்பே இல்லை என பொதுப் பணித் துறை அதிகாரி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
கொள்ளிடம் தடுப்பணை மிக உறுதியானது - பொதுப் பணித் துறை அதிகாரி ஜெயராமன்
x
கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் உள்ள தடுப்பணையின் மையப்பகுதி உடைந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது, மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில், அரைவட்ட வடிவத்தில் 39 கோடி ரூபாய் செலவில் தற்காலிக தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இன்னும், நான்கு நாட்களில் தடுப்பணை கட்டுமான பணி நிறைவடைய உள்ள நிலையில், கொள்ளிடம் ஆற்றில் வரும் தண்ணீரின் வேகத்தை புதிய தடுப்பணை தாங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், தடுப்பணை மிக உறுதியாக இருக்கும் என்று முக்கொம்பு பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் திட்டவட்டமாக தெரிவித்தார்.​ 2 லட்சம் கனஅடி நீர் திறந்தாலும் தாங்கும் வகையில் தடுப்பணை கட்டப்படுவதாக அவர் கூறினார்.   


Next Story

மேலும் செய்திகள்