நிலத்தை ஆக்கிரமித்த தனியார் கல்வி நிறுவனம்: நிலத்தை மீட்கும் மாநகராட்சி நடவடிக்கையில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

தனியார் கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மீட்கும் மாநகராட்சி நடவடிக்கையில் தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நிலத்தை ஆக்கிரமித்த தனியார் கல்வி நிறுவனம்: நிலத்தை மீட்கும் மாநகராட்சி நடவடிக்கையில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
x
சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்று மாநகராட்சிக்கு சொந்தமான 5 புள்ளி 20 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக அதை மீட்கும் முயற்சிகளில் மாநகராட்சி ஈடுபட்டது. 

அந்த நிலத்துக்கு பட்டா வழங்க கோரி அந்த கல்வி நிறுவனம் ஏற்கனவே தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க மாநகராட்சி தீவிர நடவடிக்கையை எடுத்து வந்தது.   இதை எதிர்த்து கல்வி நிறுவனம் தொடர்ந்த வழக்கு நேற்றிரவு, அவசர வழக்காக நீதிபதிகள் துரைசாமி, இளந்திரையன் அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநகராட்சி நடவடிக்கைக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க மறுத்ததுடன்,  கல்வி நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு  வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்