வசந்த மாளிகை திரைப்படத்தை இளைஞர்களும் விரும்பி பார்க்கிறார்கள் - நடிகர் ராம்குமார்

டிஜிட்டலில் வசந்த மாளிகை திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் ஆனதையொட்டி சிவாஜி ரசிகர்கள் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் திரையங்கு முன்பு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
x
நடிகர் சிவாஜி கணேசன், வாணி ஸ்ரீ நடித்து 1972ஆம் ஆண்டு வெளியான வசந்த மாளிகை திரைப்படம், 47 ஆண்டுகளுக்கு பின்பு, சமீபத்தில் டிஜிட்டலில் வெளியானது. இந்நிலையில், இந்த படம் வெளியாகி 50 நாட்கள் ஆனதையொட்டி சிவாஜி ரசிகர்கள் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் திரையங்கு முன்பு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதையடுத்து  சிவாஜியின் மூத்த மகனும், நடிகருமான ராம்குமார் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்றைய இளைஞர்களும் வசந்த மாளிகை படத்தை விரும்பி பார்த்து வருவதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்