"வரும் 13, 14, 16 ஆகிய நாட்களில் அத்திவரதரை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள்"

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு செய்யப்பட்டு வரும் கூடுதல் வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
x
சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அத்திவரதர் வைபவ ஏற்பாடுகள் குறித்து துறைவாரியாக விவாதிக்கப்பட்டது. அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். காஞ்சிபுரத்திற்கு அதிகளவில் வரும் வாகனங்களை பள்ளி, கல்லூரி வளாகங்களில் நிறுத்தவும், அப்பகுதிகளில் பக்தர்கள் ஓய்வெடுத்து செல்வதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வயது முதிர்ந்தவர்களும் , மாற்று திறனாளிகளும் அம்ரந்து செல்ல கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், தூய்மை பணிகளை தீவிரப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சியிலிருந்து கூடுதல் துப்பரவு பணியாளர்களை அனுப்ப வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும், பக்தர்களுக்கு குடிநீர் ,உணவு போன்றவைகளை சுகாதாரத்தோடு வழங்குவதை கண்காணிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு வரும் 13, 14 மற்றும் 16 ஆகிய நாட்களில் காஞ்சிபுரத்தில்  உள்ள பள்ளி,  கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கவும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் பிற அலுவர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்