காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு : 30 கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கும் பணி ரத்து

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் 30 கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கும் பணி ரத்தாகியுள்ளது.
காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு : 30 கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கும் பணி ரத்து
x
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் 30 கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கும் பணி ரத்தாகியுள்ளது. திருமங்கலம் சந்தைப்பேட்டையில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் இருந்து 30 கிராமங்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் தரைவழி மார்க்கமாக குழாய்கள் மூலம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் சாலையில் பள்ளம் தோண்டியபோது திடீரென குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வெளியேறி வருகிறது. இதனால் 30 கிராமங்களுக்கு நாள்தோறும் அனுப்பப்படும் 8 லட்சம் லிட்டர் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டது. குழாயை சரிசெய்யும் பணி உள்ளதால் 3 நாட்களுக்கு தண்ணீர் விநியோகம் இருக்காது எனவும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்