குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல் : சாலையில் படுத்து அதிகாரிகளுக்கு எதிர்ப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல் : சாலையில் படுத்து அதிகாரிகளுக்கு எதிர்ப்பு
x
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தொட்டியப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட  பகுதிகளில் கடந்த 5 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது. இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மணப்பாறை - பாலக்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்