கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு நாள் : கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின், கனிமொழி மரியாதை

முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் முதலாண்டு நினைவு தினத்தையொட்டி, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பேரணியாக சென்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு நாள் : கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின், கனிமொழி மரியாதை
x
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முதலாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திமுக சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பேரணியில், திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக எம்பி-க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதிமாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்  பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்ற தி.மு.க.வினர் கருப்பு உடை அணிந்தபடி, சென்றனர். பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின், துரைமுருகன்,  மற்றும் முன்னணி நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து, கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை ஒட்டி, ஸ்டாலின் மரக்கன்று நட்டார்.


Next Story

மேலும் செய்திகள்