சேலம் காவல் ஆய்வாளருக்கு எதிரான வழக்கு : கீழமை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்த‌து உயர்நீதிமன்றம்

கொலை வழக்கு விசாரணையை முறையாக விசாரிக்காததால், வேறு எந்த வழக்கையும் விசாரிக்க கூடாது என சேலம் காவல் ஆய்வாளருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சேலம் காவல் ஆய்வாளருக்கு எதிரான வழக்கு : கீழமை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்த‌து உயர்நீதிமன்றம்
x
சேலம் மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கை சூரமங்கலம் காவல் ஆய்வாளர் முத்துபாண்டி விசாரித்தார். இவர் தாக்கல் செய்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விடுவித்த சேலம் முதன்மை அமர்வு நீதிமன்றம், நீதிமன்றத்தில் தவறான அறிக்கையை தாக்கல் செய்து குற்றவாளிகள் தப்பிக்க வைத்த‌தாக கூறி சூரமங்கலம் காவல் ஆய்வாளர் இனி எந்த வழக்கையும் விசாரிக்க கூடாது என உத்தரவிட்டிருந்த‌து. இந்த உத்தரவை எதிர்த்து முத்து பாண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில்,  வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,  சேலம் முதன்மை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்