போதையில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய குடிமகன்கள் : தடுக்க முயன்ற போக்குவரத்து ஆய்வாளரை தாக்கியதால் பரபரப்பு

சென்னை ராயபுரத்தில், போக்குவரத்து ஆய்வாளரை , தாக்கிய குடிமகன்களை போலீசார் கைது செய்தனர்.
போதையில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய குடிமகன்கள் : தடுக்க முயன்ற போக்குவரத்து ஆய்வாளரை தாக்கியதால் பரபரப்பு
x
சென்னை ராயபுரத்தில், போக்குவரத்து ஆய்வாளரை , தாக்கிய குடிமகன்களை போலீசார் கைது செய்தனர். கல்மண்டபம் காவல் நிலையம் அருகே குடிமகன்கள் இருவர் சாலையில் தகராறில் ஈடுபட்டனர். அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து ஆய்வாளர் கோதண்டம் குடிமகன்கள் சண்டையிடுவதை தடுத்து நிறுத்த முயன்றார். போதையில் இருந்த இருவரும் அவரை தாக்கியதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆய்வாளர் கோதண்டம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனையடுத்து குடிமகன்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,.

 


Next Story

மேலும் செய்திகள்