பௌத்த இடமான காஞ்சிபுரம், அத்திவரதர் மாவட்டமாக மாறிவிட்டது - திருமாவளவன் எம்.பி

பெளத்த இடமாக விளங்கிய காஞ்சிபுரம் தற்போது அத்திவரதர் மாவட்டமாக மாறிவிட்டதாக சிதம்பரம் எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
x
பெளத்த இடமாக விளங்கிய காஞ்சிபுரம் தற்போது அத்திவரதர் மாவட்டமாக மாறிவிட்டதாக சிதம்பரம் எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற மெரினா புரட்சி திரைப்பட அறிமுக விழாவில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார். மிக விரைவில் பல அகோரிகள் நிர்வாணமாக அத்திவரதரை தரிசனம் செய்ய தமிழகம் வருவார்கள் என்று குறிப்பிட்ட திருமாவளவன், அவர்களையும் மக்கள் வணங்கினால் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்று கூறினார். தமிழ்நாடு முழுமையாக ஒரு அரசியல் தீவாக உள்ளதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்