புதிய கல்விக் கொள்கையால் ஏழை மாணவர்களுக்கு பாதிப்பு : "சமத்துவ மக்கள் கழகம் போராட்டம் நடத்தும்"

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையால் ஏழை, எளிய மாணவர்கள் பள்ளிக் கல்வியைக்கூட தொடர முடியாத சூழல் ஏற்படும் என சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையால் ஏழை மாணவர்களுக்கு பாதிப்பு : சமத்துவ மக்கள் கழகம் போராட்டம் நடத்தும்
x
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையால் ஏழை, எளிய மாணவர்கள் பள்ளிக் கல்வியைக்கூட தொடர முடியாத சூழல் ஏற்படும் என சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார்.  காமராஜர், ம.பொ.சிவஞானம் ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணத்தில் அக்கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய எர்ணாவூர் நாராயணன், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை கண்டித்து சமத்துவ மக்கள் கழகம், பல்வேறு போராட்டங்களில் ஈடுபடும் என்று கூறினார். நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்