கும்மிடிப்பூண்டி : நள்ளிரவில் ஏ.டி.எம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி

கும்மிடிப்பூண்டி அருகே பொதுத்துறை வங்கியின் ஏ.டி.எம்-மை உடைத்து, மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கும்மிடிப்பூண்டி : நள்ளிரவில் ஏ.டி.எம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி
x
கும்மிடிப்பூண்டி அருகே பொதுத்துறை வங்கியின் ஏ.டி.எம்-மை உடைத்து, மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூரவாரி கண்டிகை பகுதியில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று நள்ளிரவில் அங்குபுகுந்த மர்மநபர்கள் சிலர், ஏ.டி.எம்.இயந்திரத்தை கடப்பாரை கொண்டு உடைத்து, பணத்தை திருட முயற்சித்து உள்ளனர். அப்போது, அங்கிருந்த அலாரம் ஒலித்ததால், அவர்கள் தப்பியோடினர். இதன் காரணமாக ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் தப்பியது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்