செல்போன் பார்த்துக் கொண்டு பேருந்தை இயக்கிய ஓட்டுநர், பயணிகள் அதிர்ச்சி

புதுக்கோட்டையில் செல்போன் பார்த்துக் கொண்டே அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநரை பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
x
புதுக்கோட்டையில் செல்போன் பார்த்துக் கொண்டே அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநரை பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு சென்ற அரசுப் பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை இயக்கிக் கொண்டிருந்த போதே செல்போனை கையில் வைத்து பார்த்தபடி இருந்தார். 20 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பயணத்தில் செல்போனை கையில் வைத்துக் கொண்டு வாட்ஸ் அப் போன்றவற்றை பார்த்துக் கொண்டே ஓட்டியதால் பயணிகள் அச்சமடைந்தனர். ஒரு கையில் ஸ்டியரிங்கை பிடித்தபடி அவர் பேருந்தை அலட்சியமாக இயக்கியது குறித்து சில பயணிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட ஓட்டுநரிடம் உரிய விசாரணை நடத்தப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்