ரயில் சீசன் டிக்கெட்- பயண தூரம் நீட்டிப்பு...

ரயில்வே சீசன் டிக்கெட் வசதியில் பயண தூரம் 160 கிலோ மீட்டருக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
x
இந்த அறிவிப்பு அரக்கோணம், திருத்தணி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. சென்னை- அரக்கோணம் பிரிவில் சீசன் டிக்கெட் பயண தூரம் 10 கிலோமீட்டர் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை சென்ட்ரலில் இருந்து காட்பாடி வழியாக மேலஆளத்தூர் வரையும், எழும்பூரில் இருந்து பூங்கா, சென்ட்ரல் வழியாக குடியாத்தம் வரையும் சீசன் டிக்கெட்  வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், எழும்பூரில் இருந்து பூங்கா, கடற்கரை வழியாக குடியாத்தம் வரையும் சீசன் டிக்கெட் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சீசன் டிக்கெட்டுகள் யூ.டி.எஸ். செயலி மூலம் இன்று முதல் எடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரயில் நிலையங்களிலும் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்