மறையாத பிளாஸ்டிக்... தமிழக அரசு தடை... மாறாத மக்கள்... விஷமாகும் பிளாஸ்டிக்

தண்ணீர் குடிக்க, காபி பருக குவளைகளும், காய் வாங்க, பூ வாங்க என பக்கத்து கடை முதல் பல்பொருள் அங்காடி வரை நீக்கமற நிறைந்து, பிய்க்க முடியாத அளவுக்கு ஒட்டிக் கொண்ட வியாதிதான் இந்த பிளாஸ்டிக்.
x
தண்ணீர் குடிக்க, காபி பருக குவளைகளும், காய் வாங்க, பூ வாங்க என பக்கத்து கடை முதல் பல்பொருள் அங்காடி வரை நீக்கமற நிறைந்து, பிய்க்க முடியாத அளவுக்கு ஒட்டிக் கொண்ட வியாதிதான் இந்த பிளாஸ்டிக். உணவிலும் கூட அவை கலந்திருப்பதாக அதிர்ச்சி தகவல்களும் நம்மை மிரட்டாமல் இல்லை. சாலையில் வீசும் பிளாஸ்டிக் பைகள் சாக்கடையை அடைக்க, மண்ணுக்குள் செரிக்காமல் துருத்தி நின்று பயமுறுத்தியது. இந்த அபாயகரமான பிளாஸ்டிக்கின் ஆபத்தை உணர்ந்த அரசு, பிளாஸ்டிக் பை, கப், ஸ்பூன் உள்ளிட்ட 10 பொருட்களுக்கு கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தடை விதித்த தமிழக அரசு பறிமுதல் செய்து வருகிறது. 
           
பிளாஸ்டிக் தடையால், சிற்றுண்டி சாலைகளில், வாழை இலை வந்து, புதுமணம் பரப்பியது. பிளாஸ்டிக் தடையை வரவேற்ற நன்மக்கள் பலர், கைகளில் துணி மற்றும் சணல் பைகளை எடுத்துசெல்கின்றனர். ஆனாலும், சிலரின் கைகளில் தீர்க்க முடியாத வியாதியைப் போல், பிளாஸ்டிக் தொத்தி செல்வது பெரும் சோகம். எனினும், பிளாஸ்டிக் விற்பனைக்கு பதில் உற்பத்தியை தடுக்கலாம் என்பதும் நியாயம்தானே... 

Next Story

மேலும் செய்திகள்