"அப்பல்லோ நிர்வாகம் தடை கோரிய வழக்கில், உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு"

தவறு கண்டுபிடிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் காரணமாகவே, அப்பலோ மருத்துவமனை நிர்வாகம், விசாரணைக்கு தடை கோருவதாக, ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.
x
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.  மாறுபட்ட கோணத்தில் இந்த விசாரணை செல்வதாக கூறி அப்பலோ தாக்கல் செய்த  மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இடைக்கால தடைவிதித்தும், அப்போலோ மருத்துவர்கள் ஆணையம் முன்பு ஆஜராக தடை விதித்தும், உத்தரவிட்டது.  ஆறுமுகசாமி ஆணையம் மீது அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதன்படி, இன்று ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த  மனுவில், ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு, சரியான முறையில் தான் விசாரிக்கப்படுகிறது என்றும், விசாரணையை தொடர்ந்து நடத்த ஆணையத்தை அனுமதிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்