மழை வேண்டி தேவேந்திரனுக்கு ஏரிக்குள் வழிபாடு : பொங்கல் வைத்து, இசை வாத்தியங்களுடன் அருள்வாக்கு

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கமலாபுரத்தில், மழை வேண்டி, கிராம மக்கள், ஏரிக்குள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
மழை வேண்டி தேவேந்திரனுக்கு ஏரிக்குள் வழிபாடு : பொங்கல் வைத்து, இசை வாத்தியங்களுடன் அருள்வாக்கு
x
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கமலாபுரத்தில், மழை வேண்டி, கிராம மக்கள், ஏரிக்குள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். எண்பது ஹெக்டேர் பரப்புள்ள ஏரி, மழையின்றி கடுமையாக வறண்டுள்ளது. இதனால், மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லை. இந்நிலையில், ஏரிக்குள் பந்தல் அமைத்த கமலாபுரம், பள்ளிவீரன்காடு, கலர்காடு, எட்டுப்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள், அரிசி, தேங்காய், பழம் வைத்து தேவேந்திர கடவுளுக்கு படையல் செய்து வழிபட்டனர். இசை வாத்தியங்கள் முழங்க, சிலர் பக்தி பரவசத்தில் அருள்வாக்கு அளித்தனர். தேவேந்திர பூஜை நடத்தினால் மழை பெய்யும் என்று நம்புவதாக கூறிய அவர்கள் படையலிட்ட பொங்கலை, பிரசாதமாக பகிர்ந்துகொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்