அந்தியூர் அருகே உரிமம் இன்றி வைத்திருந்த நாட்டு துப்பாக்கி பறிமுதல்
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உரிமம் இன்றி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், அது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உரிமம் இன்றி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், அது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர். அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளை கொண்டு சிலர் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து தேடுதல் வேட்டை தொடங்கிய தனிப்படை போலீசார், ஆலயங்கரடு பகுதியை சேர்ந்த வீரப்பன் என்பவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்ததுடன், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுவரை உரிமம் இல்லாத 28 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார், அது தொடர்பாக 26 பேரை கைது செய்துள்ளனர்.
Next Story