மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு எட்டாயிரத்து 200 கனஅடியாக உள்ளது.
x
கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு எட்டாயிரத்து 200 கனஅடியாக உள்ளது. கர்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து உள்ளது. காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44 புள்ளி 22 அடியாகவும், நீர் இருப்பு14 புள்ளி 36 டி.எம்.சியாகவும் உள்ளது. விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படும் நிலையில், நீர்வரத்து, எட்டாயிரத்து இருநூறு கனஅடியாக உள்ளது. இதனால், நாளொன்றுக்கு நீர்மட்டம் தலா ஒருகனஅடி உயர்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்