அத்தி வரதர் உற்சவம்: "வெளிர்நீல நிறப் பட்டாடை அலங்காரத்தில் அத்திவரதர் " - பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரத்தில், அத்திவரதர் உற்சவத்தின் 28ஆம் நாளான இன்று, வெளிர் நீலநிறப் பட்டாடை அலங்காரத்தில், அத்திவரதர் அருள்பாலித்து வருகிறார்.
x
காஞ்சிபுரத்தில், அத்திவரதர் உற்சவத்தின் 28ஆம் நாளான இன்று, வெளிர் நீலநிறப் பட்டாடை அலங்காரத்தில், அத்திவரதர் அருள்பாலித்து வருகிறார். வார விடுமுறை என்பதால், அதிகாலை முதலே திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். இருபத்தி ஏழாவது நாளான நேற்று ஒரே நாளில் இரண்டரை லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்று வரை 37 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ள நிலையில், இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது சயன நிலையில் அருள்பாலித்து வரும் அத்திவரதர், ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் நின்ற நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்