தமிழகத்தில் எழுத்தறிவு பெற்றவர்கள் - 80.33% என ஆவணத்தில் தகவல்

தமிழகத்தில், எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பது, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் எழுத்தறிவு பெற்றவர்கள் - 80.33% என ஆவணத்தில் தகவல்
x
கடந்த 2014 -15 ம் ஆண்டு, சட்டப்பேரவையில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவண புத்தகத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த சராசரி எழுத்தறிவு 74 புள்ளி 04 விழுக்காடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 80 புள்ளி 33 விழுக்காட்டினர் எழுத்தறிவு பெற்றவர்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அளவில், எழுத்தறிவு பெற்ற ஆண்கள் 86 புள்ளி 81 விழுக்காடு என்றும், பெண்கள் அளவு 73 புள்ளி 86 என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 2019-20ம் ஆண்டுக்கான ஆவணத்திலும், அதே அளவு தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த 5 ஆண்டுகளாக எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை உயரவில்லையா அல்லது உயர்ந்த விவரங்கள் சேர்க்கப்படவில்லையா என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்