ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா தொடக்கம்...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. ஆண்டாள் அவதரித்த நட்சத்திரமான ஆடிப்பூரம் அன்று நடைபெறும் தேர்த்திருவிழா மிக முக்கியமான நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த ஆடிப்பூர விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. காலையில் ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story