படுகொலை செய்யப்பட்ட மாரியம்மாள் - 3 பெண் பிள்ளைகளின் எதிர்காலம்...?

நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி உள்ளிட்ட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வீட்டில் வேலை பார்த்த மாரியம்மாளும் படுகொலை செய்யப்பட்டார்.
x
நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஷ்வரியின் வீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக வீட்டு வேலை பார்த்து வந்தவர் மாரியம்மாள். இவரின் கணவர் 10 வருடங்களுக்கு முன் நோய்வாய்ப்பட்டு இறந்த நிலையில் தன் 3 பெண் பிள்ளைகளை வீட்டு வேலை பார்த்து அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு வளர்த்து வந்தார், மாரியம்மாள். வீரலட்சுமி, ஜோதிலட்சுமி, ராஜேஷ்வரி என 3 மகள்களும் பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். தன் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஓய்வின்றி பல வீடுகளில் வேலை பார்த்து வந்தார், மாரியம்மாள், இந்த நிலையில் தான் கொலையாளிகளின் ஆயுதம், மாரியம்மாள் உயிரையும் குடித்திருக்கிறது. இவரின் மறைவால் பிள்ளைகள் 3 பேரும் தாயை இழந்து நிர்கதியாக நிற்கின்றனர். மாரியம்மாளின் தாய் வசந்தா, தன் மகளின் மரணத்தால் அதிர்ந்து போய் இருக்கிறாள். 3 பெண் குழந்தைகளை இந்த வயதான காலத்தில் எப்படி வளர்ப்பது என்ற கவலை ஒரு பக்கம், மகளை இழந்த துயரம் ஒரு பக்கம் என அவர் கண்ணீர் விட்டு அழுவது பார்ப்போரை கலங்க வைக்கிறது. மாரியம்மாளின் குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், 3 பெண் பிள்ளைகளுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்பதும் இங்கே அவசியமானதாக இருக்கிறது. இந்நிலையில், திமுக சார்பில் மாரியம்மாள் குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. தாயை இழந்த 3 பெண் பிள்ளைகளின் எதிர்காலம் என்ன? நினைக்கும் போதே வேதனை. 

"உயிரிழந்த பணிப்பெண் குடும்பத்துக்கு திமுக நிதி உதவி"

நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியுடன் கொலை செய்யப்பட்ட பணிப்பெண் மாரியம்மாள் குடும்பத்திற்கு உதவும் வகையில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனையடுத்து, மாரியம்மாள் இல்லத்திற்கு சென்ற பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டி.பி.எம்.மைதீன்கான் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தார். மாரியம்மாளின் வருமானத்தை நம்பி, அவரது வயது முதிர்ந்த தாயார் , மற்றும் மூன்று மகள்கள்  இருந்த நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்