மழைநீரின் அளவை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் - ஜனகராஜன், தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவன தலைவர்

'தமிழகத்தில் தண்ணீர் பாதுகாப்பை நோக்கி சவால்களும், தீர்வுகளும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது.
x
'தமிழகத்தில் தண்ணீர் பாதுகாப்பை நோக்கி சவால்களும், தீர்வுகளும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இதில் தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவன தலைவர் ஜனகராஜன் பங்கேற்றார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  கூவம், அடையாறு உள்ளிட்ட நதிகளை சுத்தம் செய்ய பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார். தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழைநீரை கூட  நாம் சேமிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், மழையின் அளவு குறித்த விவரங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்