தமிழுக்கு எந்த விதத்திலும் ஆபத்து வரவில்லை - தமிழிசை

மத்திய அரசு வேண்டும் என்றே இந்தியை திணிக்காது என பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
x
தமிழுக்கு எந்த விதத்திலும் ஆபத்து வரவில்லை என பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியை திணிக்க, மத்திய அரசு நினைக்கவில்லை எனவும் ரயில்வே, தபால் துறை உள்ளிட்ட இடங்களில், அதிகாரிகள் சிலரின் தவறால், இந்தியை திணிப்பது போல் ஒரு தோற்றம் இருந்ததாக கூறினார்.  இந்தியை மத்திய அரசு திணிக்காது என்றும், அப்படி வந்தால் தமிழக பா.ஜ.க. நிச்சயமாக கோரிக்கை வைக்கும் என்றும் தமிழிசை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்