கஜா புயல் - மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஜூலை 23, 2019, 02:39 PM
கஜா புயலின் போது நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டதாக 140 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயலால் நாகை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் வேதாரண்யம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, பொதுச்சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டது. 

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டதாக 140 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை, வேதாரண்யம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்நிலையில், இந்த வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க கோரி 140 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். 

இந்த வழக்குகளின் இறுதி விசாரணை இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது. இதில், சாலை மறியலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்குகளை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார். அதே நேரத்தில் மறியலின் போது, பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக 60 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய மறுத்து, விசாரணைக்கு தடை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தார். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2366 views

பிற செய்திகள்

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

165 views

தண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்

ராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.

20 views

ப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்

ப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

51 views

ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

33 views

நாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி : விற்பனைக்கு குவிந்த கிருஷ்ண பொம்மை

கோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ணர் பொம்மை விற்பனைக்கு குவிந்துள்ளது.

25 views

ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

62 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.