"விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் வங்கி கடன்" - முதலமைச்சர் பழனிசாமி தகவல்

சென்னை அருகே 2 ஆயிரம் கோடி ரூபாயில் பிரமாண்டமான உணவு பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, தமிழ்நாடு கிராம வங்கியின் சார்பில் வங்கி கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 31 ஆயிரத்து 406 பயனாளிகளுக்கு 112 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு கடன் உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், கடந்த ஆண்டு தமிழ்நாடு கிராம வங்கி 4 சதவீத வட்டியில் சுமார் பதிமூன்றரை லட்சம்  பயனாளிகளுக்கு 9 ஆயிரத்து 210 கோடி ரூபாய் கடனாக வழங்கியுள்ளது என்று கூறினார். விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்கள், சுய தொழில் புரிவோருக்கு  தமிழ்நாடு கிராம வங்கி எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் 20 லட்ச ரூபாய் கடன் வழங்கி வருவதாக அவர் கூறினார். விவசாயிகள் உற்பத்தி செய்யும் மலர்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றிற்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலத்தில் இந்த ஆண்டு புதிய சட்டக்கல்லூரி அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்